இலங்கை தொடர்பிலான ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான ஐக்கியநாடுகள் சபை வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின் நடைமுறை ரீதியிலான முன்னேற்றங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டு அறிக்கையாக இது அமையவுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை பேரவை அமர்வுகளில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள போதிலும், அமர்வுகளுக்கு முன்னதாகவே அது வெளியிடப்படவுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக்கை பற்றிய தமது நிலைப்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை, இலங்கை அரசு வரும் நாட்களில் வெளியிடவுள்ளது.