இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் திடீரென, கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் அடுத்தடுத்து 200 பேருக்கு மேலானோர் ஒரே பகுதியில் மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மேலூர் பகுதியில் சென்ற வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீர் திடீரென மயக்கம் போட்டு சுமார் 200 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
மயக்கம் அடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மயங்கி விழுந்த மக்களின் வாயில் நுரை வெளியேறி வருவதாகவும் அவ்வப்போது வாந்தி எடுத்து வருவதுடன் வித்தியாசமான குரலில் கத்தியும் வருகின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.
Post a Comment
0 Comments