Type Here to Get Search Results !

ssss

அப்பம் சுட்டு, முதலாளியாக மாறிய சிங்கப் பெண்!

முல்லைத்தீவைச் சேர்ந்த சாஜிராணி என்ற பெண்ணொருவர் தொழிற்சாலை ஒன்றின் முதலாளியாகியுள்ளமை பலரது கவனத்தினையும் பெற்றுள்லது.

போரில் தனது கணவனை இழந்த குறித்த பெண் தனது விடாத முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் இந்த முன்னேற்றைத்தை எட்டியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் தனது கணவனைப் பறிகொடுத்த சாஜிராணி ஆரம்பத்தில் அப்பம் சுட்டு வாழ்க்கை நடத்தி அதன்மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தை முதலாக்கி மெல்லமெல்ல வளர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்லார்.

இதில் மேலும் ஒரு விசேடமான செய்தி என்னவெனில், சாஜிராணி தன்னைப்போன்ற போரில் கணவனை இழந்த பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு Sathu Star (Pvt) Ltd இன் நிரந்தர தொழிற்சாலையை புதுக்குடியிருப்பில் ஆரம்பித்துள்ளார்.

தற்போது இவரை சிங்கப் பெண் என்று பலரும் பாராட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big