Type Here to Get Search Results !

#LiveTamilTV

4 ஆண்டு கால இழுபறிக்கு பின் பிரெக்ஸிட் இறுதி செய்யப் பட்டுள்ளது பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

தொடர்ந்து 4 1/2 ஆண்டு காலமாக ஒரு உறுதியான இறுதி முடிவு எட்டப் படாமல் இழுபறியாக இருந்து வந்த ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பிரெக்ஸிட் எனப்படும் ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப் பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவுற்றது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் டுவீட் செய்துள்ள நிலையில், ஜனவரி 1 ஆம் திகதி பிரெக்ஸிட் மாற்றக் காலம் முடிவடைய உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்துடன் இங்கிலாந்தும், ஐரோப்பிய யூனியனும் சுமுகமாகப் பிரிய முடியும் எனவும் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.


பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆட்சிக் காலத்தில் இந்த பிரெக்ஸிட் விவகாரம் அவர் கையாண்டிருக்கும் மிகச் சிக்கலான மற்றும் முக்கியமான பணி என்பது குறிப்பிடத்தக்கது. கன்சவேர்ட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது இளம் பிராயத்தில் ஒரு பகுதியை ஐரோப்பிய யூனியனின் தலைமையகமான புருஸ்ஸெல்ஸில் கழித்திருந்தார். அங்கு அவரது தந்தையான ஸ்டேன்லி ஐரோப்பியன் கமிசனுக்காகப் பணியாற்றியதுடன், 90 களில் ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் அவர் கடமையாற்றி இருந்தார்.


இவ்வேளையில், பிரிட்டனின் அபிலாஷைகளுக்கு ஐரோப்பிய யூனியனுடனான கூட்டுறவு எந்தளவு சிக்கலாக இருந்தது என்பது குறித்து நன்கு அறிந்து கொள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவகாசம் கிட்டியிருந்தது. இவ்வருடம் மார்ச் மாதம் கோவிட்-19 பெரும் தொற்றுக்கு உள்ளாகியிருந்த போரிஸ் ஜோன்சன் பின்பு அவசர சிகிச்சைப் பிரிவு வரை சென்று மீண்டு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big