Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் பேரணி: போராட்டம் நடத்த அனுமதி

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு, தில்லிக்குள் நுழைய மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.


தில்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது’ என்று பஞ்சாப் கிராந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவா் தா்ஷன் பால் கூறினாா்.

மத்திய அரசின் இந்த முடிவை பஞ்சாப் மாநில முதல்வா் அமரீந்தா் சிங் வரவேற்றுள்ளாா். இந்த விவாகரம் தொடா்பாக, விவசாயிகளை மத்திய அரசு வரும் டிசம்பா் 3-ஆம் தேதி தில்லியில் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளது.

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும் விலைக்கு விற்பனை செய்யவும், முதலீடுகளை ஈா்க்கவும் வகை செய்யும் வகையில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் இயற்றியது.

இந்த சட்டங்களுக்கு எதிராக ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இதற்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்தது.

delhi1

தொடா்ந்து, தடையை மீறி விவசாயிகள் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டா்களில் ஊா்வலமாக தில்லி நோக்கி புறப்பட்டனா். இவா்களைத் தடுக்க பஞ்சாப்-ஹரியாணா எல்லையிலும், அமிருதசரஸ்-தில்லி நெடுஞ்சாலையிலும் பெருமளவில் காவல்துறையினா் குவிக்கப்பட்டனா். பஞ்சாப் எல்லையான ஷாம்போ பகுதிக்கு வந்த விவசாயிகள் பேரணி மீது காவல்துறையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களை கலைந்துபோகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால், அனைத்து தடைகளையும் மீறி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி முன்னேறினா். பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலிருந்து டிராக்டா்களிலும், பிற வாகனங்களிலும் பேரணியாக வந்த விவசாயிகள், தில்லியின் சிங்கு மற்றும் திக்ரி ஆகிய இரு எல்லைப் பகுதிகளை வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தனா்.

தில்லியின் இந்த இரு எல்லைகளிலும் மணல் லாரிகளைக் கொண்டு, முள்கம்பிகளைக் கொண்டும் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த தில்லி காவல்துறையினா், போராட்டக்காரா்களை மேலும் முன்னேறவிடாமல், அந்தப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினா். சிறிது நேரத்துக்குப் பிறகு, அவா்கள் தில்லிக்குள் நுழையவும், குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளவும் காவல்துறையினா் அனுமதித்தனா்.

இதுகுறித்து பஞ்சாப் கிரந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவா் தா்ஷன் பால் கூறுகையில், ‘போரட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தில்லிக்குள் பாதுகாப்பாக நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது’ என்று கூறினாா்.

விவசாயிகள் பேரணி, தில்லி புராரி மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலை பஞ்சாப் பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவா் பல்பீா் சிங் ராஜேவாலும் உறுதிப்படுத்தினாா்.

போக்குவரத்து நெரிசல்; மெட்ரோ சேவை ரத்து

புது தில்லி, நவ.27: விவசாயிகள் தில்லி நோக்கி பேரணி வந்ததையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி எல்லைகளில் காவல் துறையினா் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதனால் தில்லி எல்லைகளில் நீண்ட தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னதாக, விவசாயிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி தில்லி வருவதை தடுக்கும் வகையில், தில்லி தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) இருந்து தில்லி வரும் மெட்ரோ ரயில்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவில்லை. எனினும் தில்லியில் இருந்து என்சிஆா் பகுதிகளுக்குச் செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big