விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் லீடில் ரோலில் விஜயும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
விஜய்குக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தள்ளிப்போன ரிலீஸ்
அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டனமு . கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
மாலை ரிலீஸ்
இதனால் மாஸ்டர் படம் குறித்து அப்டேட் வேண்டும் என கேட்டு வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தீபாவளி திருநாளில் மாஸ்டர் டீசர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே இன்று மாலை மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது.
விஜயின் பெயர் ஜேடி
சன் டிவியின் யூடியூப் சேனலில் மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸானது. மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று வெளியான டீசரின் மூலம், மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர் ஜேடி என தெரியவந்துள்ளது.











No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.