Type Here to Get Search Results !

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..
எமது தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி

ssss

தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு- அரசின் முக்கிய அறிவிப்பு.!

தீபாவளியை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது.

தீபாவளி பண்டிகைக்கு செல்வதற்காக பொதுமக்களுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்து இருக்கின்றது. சென்னையிலிருந்து நவம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மற்றும் நவம்பர் 15 முதல் பதினெட்டாம் தேதி வரையில் மொத்தம் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் 1800 425 6151 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டு பிடிக்கும் பொருட்டு சிறப்பு படை அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது.




சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big