Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

அதிபர் பதவியை இழந்த ட்ரம்ப்பை அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்வதாக தகவல்!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Melania

அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 5 தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற மொத்தம் 270 வாக்குகள் தேவை. பென்சில்வேனியாவில் வெற்றிபெற்றதன் ஜோபைடன் வெற்றிப்பெற்றதால் 284 வாக்குகள் பெற்று பைடன் அதிபரானார்.

Melania

இந்நிலையில் முன்னாள் அதிபரான ட்ரம்பின் மூன்றாம் மனைவியான மெலானியா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், ட்ரம்ப்பை விட 25 வயது இளையவர். இது குறித்து டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி, மெலானியா மற்றும் அவரது மகன் போரனுக்கு ட்ரம்ப் தமது சொத்தில் சம பங்கு வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடந்துவருவதாக தெரிவித்துள்ளார். மற்றொரு உதவியாளரான ஓமரோசா, “ட்ரம்ப்- மெலனியாவின் 15 ஆண்டு கால திருமண பந்தம் முடிவடைந்துவிட்டது. ட்ரம்ப் பதவியில் இருந்து இறங்கியவுடன் அவரை விவாகரத்து செய்ய மெலானியா காத்திருந்ததார்” எனக் கூறினார். 

அதிபர் பதவியில் இருக்கும் போது மெலானியா விவாகரத்து செய்தால் டொனால்ட் ட்ரம்ப் அவரை தண்டிக்க வாய்ப்பிருப்பதால் அவர் பதவியை இழந்த பின் இந்த முடிவை எடுக்கலாம் என மெலானியா காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆக ட்ரம்புக்கு போனது அதிபர் பதவி மட்டுமல்ல மனைவியும் கூடதான்…

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big