முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்ள தடை: முல்லை நீதி மன்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றில் இந்த தடை உத்தரவு இன்றைய தினம்(20) பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு நகரம். முள்ளியவளை புதுக்குடியிருப்பு .மாங்குளம் .மல்லாவி ஆகிய 5 காவல்துறை நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறித்த தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு மாங்குளம் மல்லாவி ஆகிய 5 காவல்துறை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் எங்குமே மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அத்தோடு குறித்த ஐந்து காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழு தலைவர் உட்பட குழுவுக்குமாக 41 பேருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டிருக்கிறது.

இதற்கமைவாக முல்லைத்தீவு காவல்துறை பிரிவில் 13 பேருக்கும் முள்ளியவளை காவல்துறை பிரிவில் 11 பேருக்கும் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவில் 4 பேருக்கும் மாங்குளம் காவல்துறை பிரிவில் 6 பேருக்கும் மல்லாவி காவல்துறை பிரிவில் 7 பேருக்குமாக 41 பேருக்கு இந்த தடை உத்தரவுகள் பெறப்பட்டிருக்கிறது.



Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>