2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்புச் சீனப் புத்தாண்டு நாணயத் தொடரில் இது 5ஆவது நாணயம்.
காளையைச் சித்திரிக்கும் நாணயத்தில், பின்னணியில் Coneyத் தீவுப் பூங்கா இடம்பெற்றிருக்கும்.
புதிய நாணயங்களைப் பெற்றுக்கொள்ள, இப்போது முதல் அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி அந்த நாணயங்கள் வெளியிடப்படும்.
அதிகமானோர் விண்ணப்பித்திருந்தால், குலுக்கல் முறையில் அவை ஒதுக்கீடு செய்யப்படும்.