திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் புகையிரத விடுதியின் உள்ளே இன்று (03) அடி காயங்களுடன் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைப்பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தலைமையக பொலிஸாரினால் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை மகமாயப்புரத்தைச் சேர்ந்த ( வயது 68) அபயசூரிய பட்டமெனிகே விஜயபால என இறந்தவரின் மனைவிக்கு அடையாளம் காட்டினார்.

மீன் வியாபாரியான குறித்த நபர் காலை மீன் வியாபாரம் முடித்து மாலை பணம் வசூலிக்க சென்றதாக அவரின் மனைவி பொலிஸா ருக்கு வாக்குமூலம் அளித்தார்.

சடலம் நிர்வாணமான நிலையிலேயே மீட்கப்பட்டதுடன் குறித்த மரணம் உடல் உறவுக்கு பின் நிகழ்ந்துள்ளதாக தலைமையகப் பொலிஸ சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.