Type Here to Get Search Results !

#HappyNewYear2025

#HappyNewYear2025
#HappyNewYear2025 #HappyNewYear #2025

ssss

WeLComeToSOORIYAN
@Sooriyantv24

அமெரிக்க மக்களின் முடிவை மதிக்கிறோம்: பைடனுக்கு சீனா வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்துத் தெரிவிக்காத நிலையில், இறுதியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ''அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஜனவரி 20 ஆம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.

இந்த அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறும் ட்ரம்ப்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big