சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற பள்ளமான பகுதிகளும் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்குகினறன. இதனால் மக்கள் நீண்ட நாள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் தேங்காமல் இருக்க புறநகர் பகுதிக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
சென்னையில் அடர்த்தியான மழை பெய்தால் வேளச்சேரி முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாகுவது இயல்பாகிறது. ஏனெனில் இநத் பகுதிகள் எல்லாம் பள்ளத்தில் இருக்கின்றன. ஏரி மற்றும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் என்பதால் வெள்ளத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது.
வேளச்சேரி
அண்மையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையின் உள்பகுதிகளில் பெரிய பாதிப்பை ஏற்ப்டுத்தவில்லை. ஆனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இதேபோல் வேளச்சேரியிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, எண்ணூர் போன்ற பகுதிகளும் சில இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
முதல்வர்
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
குடியிருப்புகள்
அப்போது அவர் பேசுகையில், சென்னை, தாழ்வான பகுதியாக உள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகளை பாதிக்கிறது. இந்த பகுதியில் மழை காரணமாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
நிரந்தர தீர்வு
தொடர்ந்து கனமழை பெய்கின்ற தருணங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அங்கு தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி செயல்பட்டுள்ளது. இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அரசு உயர் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
Post a Comment
0 Comments