அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடு வங்கி (Goat Bank) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டம், தமிழகத்திலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது, இதன் தொடர்ச்சியாக இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை தொடங்க இந்நிறுவனம் முயன்று வருகிறது. இத்திட்டம் சந்தைகளுக்கு மாற்றான ஒரு உன்னதமான திட்டம் ஆகும். இதன் மூலம் பெண் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுகிறார்கள் ஆடு வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த ஆடுகளை சந்தைப்படுத்த மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்த இந்நிறுவனம் சந்தைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக ஆக்ரோட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தில் நீங்களும் பங்கு பெறுவதற்கும் லாபம் அடைவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதன் மூலம் குறைந்த முதலீட்டில் ஆட்டு வர்த்தகத்தில் நீங்களும் நிலையான மாத வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Post a Comment
0 Comments