கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற்றுக்கொள்பவர்களுக்கான மருந்துகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படவுள்ளது.
நோயாளர்களின் பிரயாண இடையூறு, தற்போதைய கொரோனா தொற்று தீவிர நிலை மற்றும் சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்தல் போன்றவற்றின் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகள் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கும் சேவை இன்று முதல் (5.11.2020) மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மருந்துகளை தமது வீடுகளிலேயே பெற்றுக்கொள்ள விரும்பும் நோயாளர்கள் கீள்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொ.பே.இலக்கம்: 0212283037
அழைப்பினை மேற்கொள்ளும் போது கிளினிக் கொப்பியை அருகில் வைத்திருப்பது தேவையான தகவல்களை பெற்றுகொள்ள உதவும்.
மேலும் மருந்துகள் பாவிப்பதில் காணப்படும் சந்தேகம் தொடர்பாக கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.
திரு உ.யாகீர் - 0776770357 (மருந்தாளர்)
வி.ரமணன் - 0774665345 ( மருந்துக்கலவையாளர்)
Post a Comment
0 Comments