Type Here to Get Search Results !

ssss

பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காலநிலை லட்சிய உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து அழைத்ததாக வியாழக்கிழமை பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில்  உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் அடுத்த மாதம் 12ம்  தேதி இந்த மாநாடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு பல்வேறு நாடுகள் பருவநிலை தொடர்பாக நீண்டகால அடிப்படையில் புதிய திட்டங்களை அறிவிக்கவும், வியூகங்களை வகுக்கவும், புதிய பருவநிலைக்கான நிதி உறுதிமொழிகளை ஏற்கவும் சிறந்த தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big