தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அகற்ற விருப்பம்... பயணிகளுக்கான கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அகற்ற விரும்புவதாக ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, பன்னாட்டுப் பயணிகள் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டக் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மக்கள் விமானத்திலிருந்து இறங்கி உடனடியாக ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் சோதிப்போம். இது குறித்து எனக்கு மத்திய அரசின் உதவி தேவை, அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால், அது எங்கள் அதிகார வரம்பு இல்லையென்றாலும் நாங்கள் தனியாக செல்வோம் என்றும் அவர் கூறினார்.
Post a Comment
0 Comments