இஸ்லாமிய பயங்கவாதம் முற்றாக அழித்தொழிக்கப்படும் - பிரான்ஸ் உள்துறை அமைச்சர்!!

இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் முற்றாக அழித்தொழிக்கப்படும்.


எங்களிற்கான எதிரிகள் நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ளனர். நாட்டிலுள்ள அடிப்படைவாத, திவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்'" என நீஸ் நகரின் தேவாலயத்திற்குள் நடாத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தார்மனன் (Gérald Darmanin)) தெரிவித்துள்ளார்.



சார்லி எப்தோவின் முன்னாள் அலுவலகம் மீதான தாக்குதல், நீஸ் தாக்குதல், காவற்துறையினர் மீதான தாக்குதல் எனத் தொடர்சியான இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் வலுத்து வருகின்றன.

அடிப்படை தீவிர மதவாத இஸ்லாமியர்கள் 14பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியெற்றப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில், மேலும் 18 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர் எனவும், உள்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post