Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா?.. இராணுவ தளபதி விளக்கம்

மேல் மாகாணம் முழுவதும் நாளை 29ம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு அமுலிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 8 மணி முதல், இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை நிலையங்கள், மருந்தகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

அதேநேரம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாய்ப்பளிக்கப்படும்.

இந்த தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டிருக்கும்.

கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தங்களை திறப்பதற்கு அனுப்பதிக்கப்படும்.

இதேவேளை மேல்மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமானதே. இது எதிர்வரும் திங்கட் கிழமையுடன் நிறைவு செய்யப்படும்.

இந்தநிலையில் மேல்மாகாணத்தில் இருக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதால், அந்த மாவட்டங்களிலும் கொவிட்19 பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

எனவே யாரும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலானாலும், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த இதனைத் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களும். பரீட்சைநிலைய சேவையாளர்களம் தடையின்றி பயணிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்ற போது வெளியில் உள்ளவர்களுடன் தொடர்புபட்டு செயற்பட முடியாது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு வெளியில் இருந்து செல்பவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள்.

மேலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் முன்பு சமூக இடைவெளியை பேணாதவர்களும் கைது செய்யப்படுவர்.

அத்துடன் இந்த வார இறுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதியிலுள்ள மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும் .

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்களும் சுற்றுலா பயணங்கள் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big