Type Here to Get Search Results !

@LiveTamilTV

---------------------------------------------------------------------------------

SOORIYAN TV(#Tamil)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    --------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------

    வண்ண விளக்கொளியில் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்!

    தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.. வண்ண விளக்கொளியில் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்.

    தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு நாள் விழா நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 





    தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

                               
                                                     (எடப்பாடி பழனிசாமி)
    நாளை (நவம்பர் 1) தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
      இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், ‘நம் நாடு யாது என்றால் தமிழ் நாடு என்றல்’ என்ற ஒரு வாக்கியத்தில் தமிழ்நாடு என்ற சொல்லை பயன்படுத்தியதை பார்க்க முடிகிறது.
      மொழிக்காக நம் முன்னோர்கள் நடத்திய போராட்டங்களால் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது தமிழ் பேசும் பகுதி 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தனியாக பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதன்பின் பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

      இதற்காக பாடுபட்ட சான்றோர் பெருமக்களை போற்றவும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளை சிறப்பிக்கவும் கடந்த ஆண்டு முதல் நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
      தமிழ் தன்ன்னையும் வாழ வைத்துக்கொண்டு பிற மொழிகளையும் வளர்த்தெடுக்கும் தன்மை, ஆற்றல் பொருந்திய மொழி என்பதை பேரறிஞர் அண்ணா எடுத்துக்காட்டியுள்ளார். அவர் வழியில் நாம் நமது அடையாளராம பெற்றிருக்கிற தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம். அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

      Post a Comment

      0 Comments