Type Here to Get Search Results !

ssss

ஒவ்வொரு புதன் கிழமையும் பொது மக்கள் தினம்!

Image
ஒவ்வொரு புதன் கிழமையும் பொது மக்கள் தினம்! 
ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பொது மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக பொது மக்கள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக முன்வைத்த முறைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு வசதியாக இந்த பொது மக்கள் தினத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

புதன் கிழமைகளில் அரசாங்க அதிகாரிகள் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாது பொது மக்களின் பிரச்சிணைகளை தீர்ப்பதில் ஈடுபடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் தினத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் பொது மக்களின் சந்திப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்.

தூர இடங்கிளில் இருந்து கொழும்பு வரும் மக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது மக்கள் தினம் தொடர்பாக அரசாங்க செயலாளர்களுக்கு சுற்று நிரூபம் வெளியிடப்படவுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big