கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்த் தலைமைகள் காலத்துக்கு காலம் செய்வது ஒன்றும் சொல்வது ஒன்றுமாக இருந்த காரணத்தாலேயே மக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய மாற்றம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு வழி செய்யும்.
தென் இலங்கை அரசியல் சக்திகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகலரும் என் மீது பெரும் அவதூறுகளை சாட்டியுள்ளனர். அவற்றை நம்பாது தனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி. அதன்படி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது. தேர்தலில் வெற்றி பெற்ற எனக்கு முன்னால் மிகப் பெரும் கடமைகள் காத்திருக்கின்றன.
இப்போது, பாராளுமன்றத்தில் எனக்கு எதிர்ப்பு வருகின்ற போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மௌனிகளாக இருக்கின்றார்கள். தமிழ் மொழி உலகின் மூத்த மொழி என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கூறப்படுகின்றது. அதனை நான் கூறும்போது தென்னிலங்கையில் உள்ளவர்கள் நடிக்கிறார்கள்.” என்றுள்ளார்.