Type Here to Get Search Results !

இணையத்தையே புரட்டி போட்ட இந்தி எதிர்ப்பு:- தேசிய அளவில் பிரபலமாக உள்ளது!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்திக்கு எதிராக அணிந்து இருந்த டி ஷர்ட் காரணமாக இணையம் தற்போது இந்தி எதிர்ப்பு டிரெண்ட் தொடங்கி உள்ளது. யுவனை இதனால் இணையத்தில் அவரின் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
தமிழகம் 1950களில் இருந்தே இந்தி எதிர்ப்பு அரசியலை விடாமல் பின்பற்றி வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் என்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாமே இந்தி எதிர்ப்புக்கு எதிராகவே இருந்துள்ளது.
அப்போது தொடர்ந்து இந்தி எதிர்ப்பு இப்போதும் தமிழக அரசியலில் மிக முக்கியமான காரணியாக திகழ்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இணையம் முழுக்க #ஹிந்தி_தெரியாது_போடா டிரெண்ட் ஆகி வருகிறது.
சினிமா நட்சத்திரங்களின் டி சர்ட் எதிரொலி- சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது #ஹிந்தி_தெரியாது_போடா
தேசிய அளவில் டிரெண்ட்

தேசிய அளவில் டிரெண்ட்

தற்போது டிவிட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்திக்கு எதிராக மக்கள் இதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஏன் தாய் மொழி கல்வி அவசியம், ஆங்கிலம் ஏன் அவசியம், இந்தி இல்லாமல் தமிழகம் எப்படி முன்னேறி உள்ளது என்று இதில் தீவிரமாக டிவிட்கள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு தொடங்கிய டிரெண்ட் இன்று தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
எப்படி தொடங்கியது

எப்படி தொடங்கியது

இந்த டிரெண்டிங் எப்படி தொடங்கியது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. நேற்று இணையத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் யுவன் அணிந்து இருந்த டீ சர்ட்தான் தற்போது வைரலாகி உள்ளது. அதில், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் "ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் இந்த டி சர்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
வைரலானது

வைரலானது

இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது. அதேபோல் இந்தி தெரியாது போடா என்று நடிகர் சாந்தனு அணிந்த டீ ஷர்ட் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. திடீரென இவர்கள் இருவரும் இப்படி டீ ஷர்ட் போட்டு புகைப்படம் வைரலாகவே நேற்று இரவோடு இரவாக பல பிரபலங்கள் இதே டீ ஷர்டை அணிந்தனர். முக்கியமாக யுவன் ரசிகர்கள் பலர் இரவோடு இரவாக டீ ஷர்ட் பிரிண்ட் செய்து, இன்று இணையம் முழுக்க டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
யுவன் வைரல்

யுவன் வைரல்

இந்திக்கு எதிராக யுவன் ஒரு புரட்சியை தொடங்கிவிட்டார் என்று பலர் யுவனின் செயலை பாராட்டி வருகிறார்கள். யுவன் எப்போதும் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசியது இல்லை. பொது பிரச்சனைகளில் தலையிட்டது இல்லை. ஆனால் முதல் முறையாக இந்திக்கு எதிராக குரல் கொடுத்து உள்ளார். இதனால் யுவன்தான் இந்திக்கு எதிராக தற்போது பிரச்சாரத்தை தொடங்கினார் என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.
ஆனால் யார்

ஆனால் யார்

ஒரே ஒரு போட்டோ மூலம் இணையத்தையே யுவன் புரட்டி போட்டு விட்டார் என்று அவரின் ரசிகர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இந்த டிரெண்டை யுவன் மட்டுமே தொடங்கவில்லை. பலர் மொத்தமாக தொடங்கிய டிரெண்டிங் இது. யுவன், சாந்தனு தொடங்கி பலர் இதை தொடங்கி வைத்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வெற்றிமாறன்

வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். டெல்லி விமான நிலையத்தில் தமிழர் என்று தன்னை அதிகாரிகள் இகழ்ந்து பேசியதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இதுதான் சினிமா துறையினரை இந்திக்கு எதிராக கொதிக்க வைத்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யுவன், சாந்தனு பொங்கி எழுந்துள்ளனர் என்கிறார்கள்.
கனிமொழி எப்படி

கனிமொழி எப்படி

இந்த டிரெண்டிற்கு திமுக எம்பி கனிமொழியும் ஒரு வகையில் காரணம் என்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார்..
யார் தொடங்கிய பின்னணி

யார் தொடங்கிய பின்னணி

அப்போது தொடங்கிய பிரச்சனைதான் இப்போது டிரெண்டாகி உள்ளது. அதனால் இது யுவன், கனிமொழி, வெற்றிமாறன், சாந்தனு, நடிகர் சிரீஷ் என்று பலர் சேர்ந்து தொடங்கிய டிரெண்ட். தற்போது தேசிய அளவில் இது வைரலாகி உள்ளது. மக்கள் பலர் இதில் டிவிட் செய்ய தொடங்கி உள்ளனர்.வடஇந்தியாவில் இதற்கு மிகவும் கடுமையான எதிர்வினைகள் எழ தொடங்கி உள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big