
கனடாவில் விதிமுறைகளை மீறி ஒன்றாரியோ மாகாண கடற்கரையில் மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் விமர்சனம் எழுந்துள்ள போதிலும், ஒன்றாரியோ மாகாண கடற்கரைகளை மூடப்படாது என்று மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 ஆம் தேதி, கனடா தினத்தன்று வசாகா கடற்கரையில் ஏற்பட்ட மக்கள் நெரிசலை மேயர் நினா பிஃபோல்ச்சி விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களிடம் கேட்கபோதே, கடற்கரைகள் மூடப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், கருத்து வெளியிட்டா மேயர் ஜோன் டோரி, டொராண்டோ குடியிருப்பாளர்கள் கொஞ்சம் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Social Plugin
Social Plugin