திடீரென இலங்கையில் அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து நாடு மீண்டும் ஸ்தம்பிக்கப்படவுள்ளநிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை 12ம் திகதி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்டங்களின் கீழ் கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
#HappyNewYear2025
ssss
WeLComeToSOORIYAN
Social Plugin
Social Plugin