கனடாவில் இரண்டாவது அலை கோவிட் 19 பரவலை தடுக்க, மக்கள் அனைவரும் முக உறைகளை (Mask) அணிய வேண்டுமென, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார். 

இவ்வாறான தொற்றுக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பாதிப்பினை ஏற்படுத்தும் இயல்பை கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத சந்தர்ப்பங்களில், சாதாரண முக உறைகளை அணியுமாறு, கனடிய தலைமை சுகாதார வைத்திய அதிகாரி நேற்று முதன்முறையாக பரிந்துரைத்திருந்த நிலையில், பிரதமரின் வேண்டுகோள் வெளியாகியுள்ளது. அதேவேளை, கனடாவில் இரண்டாவது அலை கோவிட் 19 பரவல், வரும் செப்டம்பர் மாதமளவில் ஏற்படலாம் என, சில மருத்துவ வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.