கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது.

தமிழர்கள், சிங்களவர்கள், பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக கொழும்பில் இவ்வாறான அஞ்சலி நிகழ்வு பொது வெளியில் இதுவே முதற்தடவையாகும்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் ஆத்ம சாந்தி வேண்டியும்

அவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரியும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு,

வருடாவருடம் நினைவேந்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




Post a Comment

Previous Post Next Post