காபூல் விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி அதன் பாதுகாப்பை அமெரிக்க கூட்டுப் படையினர் மீட்டுள்ளனர்.
காபூல் நகரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது
எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக ஆப்கன் படையினர் தாலிபன்களிடம் வீழ்ந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையில் இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது.
"பொதுமக்களில் சிலர் தங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக சில வகை ஆயுதங்களை வைத்திருப்பதாக நாங்கள் அறிகிறோம். அவர்கள் இனி பாதுகாப்புடன் இருப்பர். நாங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை," என்று தாலிபன்கள் கூறியதாக பிபிசி அரபு சேவை தெரிவிக்கிறது.
இன்று காலையில் டோலோ உள்ளூர் தொலைக்காட்சியில் ஆயுதங்களுடன் வந்த தாலிபன்கள், அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்துச் சென்றனர்.
இந்த தகவலை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டோலோ டிவி, "சில தாலிபன்கள் எங்களுடைய அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்பு வீரர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த ஆயுதங்களை பெற்றுச் சென்றனர். இனி இந்த வளாகம் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் கூறிச் சென்றனர்," என்று கூறியுள்ளது.
இதேவேளை, டோலோ நியூஸ் இயக்குநர் சாத் மொஹ்சேனி ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒளிபரப்புப் பணியை எவ்வித தடங்கலுமின்றி செய்யலாம்," என்று கூறியுள்ளார்.
Social Plugin
Social Plugin