Type Here to Get Search Results !

#LiveTamilTV

இரவு உறக்கம் செல்ல முன், ஒரு பூண்டு பல்லை கழிவறையில் வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?..

உலகிலேயே பலருக்கும் மிகவும் பிடித்த இடம் என்றால், அது அவர்களின் வீடாகத் தான் இருக்கும். எங்கு சென்றாலும் கிடைக்காத சந்தோஷம், அவர்களது வீட்டில் கிடைக்கும். அப்படிப்பட்ட வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள அனைவருமே விரும்புவோம். வீட்டிலேயே மிகவும் அசுத்தமான மற்றும் கிருமிகள் நிறைந்த இடம் என்றால் அது கழிவறை தான். அந்த கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள நாம் பல பொருட்களை வாங்கி சுத்தம் செய்வோம். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு பொருள் கழிவறையில் மாயங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது. அது தான் பூண்டு.

What Happens When You Put Garlic Inside Toilet Before Going To Bed

பூண்டு சமையலைத் தவிர பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, நாட்டு வைத்தியத்தில், சளி, ஜலதோஷம் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளுக்கு எதிராக போராட பூண்டு பயன்படுத்தப்படுகிறது. தோட்டத்தில் பூண்டு நீரைத் தெளித்தால், அது பூக்களைப் பூக்க வைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட பூண்டு, கழிவறையில் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இப்போது ஒரு பல் பூண்டு கொண்டு கழிவறையை எப்படி சுத்தம் செய்வதென்பதைக் காண்போம்.

சுத்தப்படுத்தும் அற்புத பொருள்


சுத்தப்படுத்தும் அற்புத பொருள்

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பூண்டு ஒரு அற்புதமான சுத்தப்படுத்தும் பொருளும் கூட. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. மேலும் இந்த பொருள் தான் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அண்ட விடாமல் தடுக்கிறது.

பூண்டை எப்படி சுத்தம் செய்ய பயன்படுத்துவது?

பூண்டை எப்படி சுத்தம் செய்ய பயன்படுத்துவது?

உங்களால் விலை உயர்ந்த கழிவறையை சுத்தம் செய்ய உதவும் பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியவில்லையா? என்ன செய்தாலும் உங்கள் வீட்டு கழிவறை சீக்கிரம் அசுத்தமாகிறதா? அப்படியானால் கழிவறையை சுத்தம் செய்ய பூண்டு பல்லை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த இரண்டு வழிகளுமே மிகவும் ஈஸியானது.

முதல் வழி


முதல் வழி

இரவு நித்திரைக்கு(தூங்கும்) முன்ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் நீரை ஊற்றி ஒருமுறை தேய்த்து கழுவினால், கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்குவதோடு, கிருமிகளும் அழிந்துவிடும்.

இரண்டாவது வழி


இரண்டாவது வழி

இரண்டாவது வழி பூண்டு ஊற வைத்த நீர். இந்த நீரைத் தயாரிப்பதற்கு, ஒரு கப் நீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு இருந்தால் போதும். பின் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டுகளை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்கும் போது அடுப்பை அணைத்து, 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பின் அந்நீரை வடிகட்டி, அதை இரவு தூங்கும் முன் கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.

முடிவு

முடிவு

கழிவறை சுத்தமாக துர்நாற்றமின்றியும், பாக்டீரியாக்கள் இல்லாமலும், கறை ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டுமானால், மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளுங்கள். இதனால் கழிவறையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.



SOURCE: Boldsky.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big