Type Here to Get Search Results !

#LiveTamilTV

கொரோனா அவலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க: முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் சிவகுமார்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவிலிருந்து சிக்கி தவிக்கும் நம்ம மக்களை காப்பாத்துங்க.

மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, வெண்டிலேட்டர் இல்லை இதில் இருந்து மக்களை காப்பாத்துங்க.

வெண்டிலேட்டர் இல்லை இதில் இருந்து மக்களை காப்பாத்துங்க.

தமிழ் படிச்சா வேலை

பதவி ஏற்றார்
பதவி ஏற்றார்

தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்றார். 5 முக்கிய கோப்புகளில் அதிரடியாக கையெழுத்திட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

முதல்வருக்கு வேண்டுகோள்

முதல்வருக்கு வேண்டுகோள்

இந்நிலையில், நடிகர் சிவக்குமார், முதலமைச்சராக பொறுப்போற்றுள்ள முதலமைச்சருக்கு வீடியோவின் மூலம் ஒரு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், பேசிய சிவக்குமார, திமுகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 5 தடவை முதலமைச்சராக இருந்திருக்காரு, திட்டத்தட்ட 19 ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆண்டு இருக்காரு.

இமாலய சாதனை

இமாலய சாதனை

1996ம் ஆண்டு திமுக 172 இடங்களை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு அற்புறம் 25 ஆண்டுகளுக்கு கலைஞர் மறைவுக்கு பிறகு இந்த தேர்தலில் 159 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியை வெற்றி பெற்றது ஸ்டாலின் அவர்களின் இமாலய சாதனை. அதே போல உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலில் வெற்றி பெற்று தாத்தாவுக்கு ஏற்ற பேரன் என்பதை நிருபித்து விட்டார்.

மக்களை காப்பாத்துங்க

மக்களை காப்பாத்துங்க

முதலமைச்சருக்கு எனது முதல் வேண்டுகோள், கொரோனாவிலிருந்து நம்ம மக்களை காப்பாத்துக்க, கூட்டம் கூட்டமா மருத்துவமனையிலும் மருந்துக்கடையிலும் கூட்டமா மக்கள் நிக்குறத பாக்கும் போது ரொம் கஷ்டமா இருக்கு. மருத்துவமனையில படுக்கைகள் இல்லை, படுக்கை இருந்த ஆக்ஸிஜன் இல்லை, வெண்டிலேட்டர் இல்லை இந்த அவலத்தில் இருந்து மக்களை காப்பாற்றுங்க.

தமிழ் படிச்சா வேலை

ஆந்திராவில் வசிக்குற யாராக இருந்தாலும் கட்டாயம் தெலுங்கு படிச்சே ஆகனும், கர்நாடகாவில் வசிக்கிற யாராக இருந்தாலும் கட்டாயம் கன்னடம் படிச்சே ஆகனும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் படிக்காமலே பி.ஏ, எம்.ஏ படிச்சி வேலைக்கு போகலாம் என்ற அவலம் இங்கு தான் இருக்கு. செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த முத்தமிழறிஞரின் வாரிசு நீங்க. இங்கே தமிழ் வழியில் படிச்சி பட்டதாரி ஆனா தமிழ்நாட்டில் நிச்சமா வேலை உண்டு என்ற நிலைமையை உருவாக்கினா, தமிழ் நிச்சயமா வாழும் என்று முதலமைச்சருக்கு கானொளி பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big