உணவே மருந்து என்பது உண்மையான விசயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.
உணவே மருந்து என்பது உண்மையான விசயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை உண்டால், அது வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கும். அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றை உண்டாக்கிவிடும். எனவே காலை வேளையில் சிட்ரிக் பழங்களை சாப்பிடவேண்டாம்.
காரமான உணவுகள் காரமான உணவுகள் உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் இரைப்பையின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்படும்.
அதேபோல் காலையில் பச்சை காய்கறிகளையோ, சாலடையோ சாப்பிடுவது உடம்புக்கு உகந்ததல்ல. சாலடில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளதால் அவை நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தற்கான வாய்ப்புகளும் அதிகமாம்.
Social Plugin
Social Plugin