Type Here to Get Search Results !

#LiveTamilTV

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல்!

சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் ம் ஈது ஏமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா டுவிட்டர் பதிவில், ஏவுகணையைப் பயன்படுத்தி விடியற்காலையில் இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக விவரிக்காமல் தாக்கியதாகவும் கூறினார்.

அராம்கோ, அதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பெரும்பாலும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், ஜெட்டாவிலிருந்து 1,000 கி.மீ (620 மைல்) தொலைவில் உள்ளன, தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் ஜெட்டா நகரில் உள்ள விமானநிலையத்தல் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாட்டில் உள்ள மற்ற விமானநிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது வரை சவுதி தரப்பில் இருந்து இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்படவில்லை.

சில வாரங்களுக்கு முன் ஹவுத்தி மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்க ரத்து செய்தது, மேலும் இனி ஹவுத்திகள் பயங்கரவாதிகள் அல்ல என்று கூறியது நினைவுக் கூரத்தக்கது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big