நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.
சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பெயர் போனவர் மீரா மிதுன். மாடலான இவர் ஃபெமினாஸ் தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்றார்.
ஆனால் அதில் வயதை தவறாக காட்டியதாலும் திருமணம் ஆனதை மறைத்ததாலும் அவருக்கு அளிக்கப்பட்ட அழகிப்பட்டம் திரும்பப்பெறப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 3
இதனைதொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார் மீரா மிதுன். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சேரன் மீது குற்றச்சாட்டு
இதில் சக போட்டியாளர்களிடம் எப்போதும் சண்டை வாக்குவாதம் என இருந்த மீரா மிதுன், இதன் உச்சக்கட்டமாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி குண்டை தூக்கிப்போட்டார்.
அடங்காத மீரா மிதுன்
மீரா மிதுனின் இந்த குற்றச்சாட்டால் கமலே அதிர்ந்து போனார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். வெளியே வந்த பிறகும் அடங்காத அவர், தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக ஹவுஸ்மேட்டுகளை விளாசி தள்ளினார்.
மனைவிகள் குறித்து ஆபாச பேச்சு
கமலையும் கன்னாபின்னாவென விமர்சித்தார் மீரா மிதுன். தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவையும் தரம் தாழ்ந்து விமர்சித்த மீரா மிதுன், இருவரின் மனைவியையும் ஆபாசமாக பேசினார்.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் பதிலுக்கு மீரா மிதுனை வச்சு செய்தனர். அவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த அவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கதறவிட்டனர். இந்நிலையில் மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர்தான் காரணம்
சூர்யா மற்றும் விஜய்யின் ரசிகர்களிடமும் மீரா மிதுன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் அதிமுக பிரமுகரான திருநங்கை அப்சரா ரெட்டிதான் காரணம் என்றும் தற்போது தனக்கு எல்லாம் புரிந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.
அப்சரா ரெட்டிதான் காரணம்
தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அப்சரா ரெட்டிதான் காரணம் என்றும் சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள யாரும் காரணமில்லை என்றும் கூறியுள்ளார். அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாகவும் அதற்காக அவர்களிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறியுள்ளார்.
கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை
அப்சரா ரெட்டியை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மீரா மிதுன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தொழில் அதிபரான ஜோ மைக்கேலையும் அப்சரா ரெட்டியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Social Plugin
Social Plugin