Type Here to Get Search Results !

#LiveTamilTV

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர்- யாழ் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே தமிழக மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என யாழ்பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இலங்கை தீவை அண்டியபகுதியில் தமிழக மீனவர்களின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்த மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்தகாலங்களிலும் இனவெறியர்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமையானது அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இலக்குவைக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இயற்கை சீற்றங்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்தவாறு மீனவர்கள் எல்லை தாண்டுகின்ற சம்பவங்கள் பல்வேறு கடற்பிராந்தியங்களிலும் இடம்பெறுகின்றன குறிப்பாக இலங்கை தீவிற்குள் எல்லை தாண்டுகின்ற மீனவர்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் மாத்திரம் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை முகங்களை மூடியவாறு எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் தாயகமீனவர்களினது வலைகளை அறுக்கின்ற அச்சுறுத்தலிற்கு உள்ளாக்குகின்ற சம்பவங்கள் தொடபில் எழுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் தமிழக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big