Type Here to Get Search Results !

#LiveTamilTV

தமிழகத்தில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை: முதல்வர் எ.பழனிச்சாமி

முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜனவரி 28ஆம் தேதி இந்த ஆண்டு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா நாளில் விடுமுறை விடப்படும் வகையில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் அறிவிப்பு முருக பக்தர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

முருகனுக்கு உகந்த தைப்பூசம்

தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதரராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

தைப்பூச விரத மகிமை

தைப்பூச விரத மகிமை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

முருகன் கோவில்களில் திருவிழா

முருகன் கோவில்களில் திருவிழா

தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். தைப்பூசத்திற்காக மலேசியாவிலும், மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

காவடி சுமக்கும் பக்தர்கள்

காவடி சுமக்கும் பக்தர்கள்

இந்த ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். பழனிக்கு பக்தர்கள் காவடி சுமந்து பாதையாத்திரையாக செல்வார்கள். தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

உலகமெங்கும் தைப்பூசம்

உலகமெங்கும் தைப்பூசம்

தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்கடவுள் முருகப்பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படுவது தைப்பூச திருவிழா. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், இந்தோனேசியா நாடுகளிலும் வசிக்கும் தமிழக மக்களால் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்ற போது இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளில் தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை விடப்படுவது போல தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீரிலித்து வரும் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும் இனிவரும் ஆண்டுகளில் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு இந்த அறிவிப்பு முருக பக்தர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big