Type Here to Get Search Results !

#LiveTamilTV

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிப்பு: வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று காலை(03) 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் வீடொன்று முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகயும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களை சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்கள் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🚨 இரணைமடு வெள்ள அபாய எச்சரிக்கை 🚨
தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் இரணைமடு பகுதியில் 60 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் மாங்குளம் மற்றும் கனகராயன் குளம் பிரதேசத்தில் 70 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18 அடியை அண்மித்துள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
கனகாம்பிகை குளம் கிட்டத்தட்ட 6 அடியை அண்மித்துள்ளது அதன் கொள்ளளவு 10.6 அடி எனவே தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அதிகாலை வான்பாய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், முதியவர்கள், மாற்றுவலுவுடையோர் கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்களை அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு முன்கூட்டியே தற்போதய கொரோணா சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்

பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big