பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தின் ஊடாக மாத்திரமே தோற்கடிக்கப்பட்டது. எமது நாட்டு அரசியலும், சர்வதேச மட்டத்திலும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கை வியாபித்துள்ளது. வடக்கு அரசியல்வாதிகள் பிரிவினைவாத கொள்கையுடன் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மாவீரர் தினம் நினைவுகூருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இவ்விடயம் பெரும் போராட்டமாகவே உள்ளது.
இம்முறை மாவீரர் தினம் நினைவுகூருவதற்கு யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்து அதனை தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்செயற்பாடு நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக அமையாதா?
ஒரு நாட்டில் ஒரு சட்டம் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மாகாண அடிப்படையில் சட்ட நிர்வாகத்தை பிரித்து நிர்வாகம் செய்கிறது. இது மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆதரவுக்கு முரணானது.
மாவீரர் தின நினைவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை வடக்கு அரசியல்வாதிகளே மீண்டும் தோற்றுவிப்பார்கள். ஆகவே அரசாங்கம் தேசியபாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.
Social Plugin
Social Plugin