நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகா தார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 தற்பொழுது இவற்றை அகற்றும் பொழுது எந்தவித சுகாதார ஆலோசனைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இவற்றை அகற்றும் பொழுது எந்தவித சுகாதார ஆலோசனைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்தக் கழிவுப் பொருட்களை அகற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் என்பவற்றை அகற்று வதற்கு முன்னர் அவற்றைச் சவர்க்காரம் இட்டு கழுவி உலர்த்த வேண்டும்.
அங்குனுகொல பெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட்- 19 கொரோனா தொற்றாளர்கள் என அடை யாளம் காணப்பட்டவர்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டவர்களிடமிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் மஞ்சள் நிறப் பொதியில் இடப்பட்டு அகற்றப்படுவது அவசியமாகும்.
 
 
 
 

 
 
 
 
 
 
0 Comments