தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதிகாரியை டிரம்ப பதவி நீக்கியுள்ளார்.
சைபர் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு முகவர் அமைப்பின் தலைவர் கிறிஸ் கிரெப்சே பதவி நீக்கப்பட்டுள்ளார்.
வாக்குகள் குறித்த மிகவும் தவறான தகவலை வெளியிட்டமைக்காகவே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
தனது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னர் டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில் கிரெப்ஸ் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவரது பதவி நீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை டிரம்பின் டுவிட் மூலமே தான் பதவி நீக்கப்பட்டதை அறிந்ததாக
தெரிவித்துள்ள கிறிஸ் கிரெப்ஸ் நாங்கள் சரியாக செய்தோம் இன்றைய நாளை
காப்பாற்றினோம் நாளைய நாளை பாதுகாத்தோம் என பதிவிட்டுள்ளார்.
Social Plugin
Social Plugin