Type Here to Get Search Results !

#LiveTamilTV

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானது: ரவுடி வாத்தியா இருப்பாரு போல?.. ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் லீடில் ரோலில் விஜயும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

       

விஜய்குக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டனமு . கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

மாலை ரிலீஸ்

மாலை ரிலீஸ்

இதனால் மாஸ்டர் படம் குறித்து அப்டேட் வேண்டும் என கேட்டு வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தீபாவளி திருநாளில் மாஸ்டர் டீசர் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே இன்று மாலை மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது.

விஜயின் பெயர் ஜேடி

விஜயின் பெயர் ஜேடி

சன் டிவியின் யூடியூப் சேனலில் மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸானது. மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று வெளியான டீசரின் மூலம், மாஸ்டர் படத்தில் விஜயின் பெயர் ஜேடி என தெரியவந்துள்ளது.

மிரட்டலாக விஜய் சேதுபதி

மிரட்டலாக விஜய் சேதுபதி

அப்போது எனக்கு தெரியும் சார், ஜேடிதான் கல்பிரிட் என்கிறது ஒரு குரல்.. அப்போது ஒரு வாத்திக்கு எங்கிருந்து இவ்ளோ தைரியம் வந்துச்சு என மிரட்டலாக வருகிறார் விஜய் சேதுபதி.

ஜேடி ஸ்டூடண்ட் இல்ல..

ஜேடி ஸ்டூடண்ட் இல்ல..

ஒரு ஸ்டூடண்ட் இவ்ளோ பிரச்சனை பண்ணுகிறார் என்றால் டிஸ்மிஸ் பண்ண வேண்டியதுதானே என மாளவிகா மோகனன் கேட்க, அதற்கு, ஜேடி ஸ்டூடண்ட் இல்லை மாணவர் என்கிறது மற்றொரு குரல்.

நேருக்கு நேர் மோதும்..

நேருக்கு நேர் மோதும்..

ஆட்டம் பாட்டம் , ஆக்ஷன் காட்சிகள் என பட்டைய கிளப்புகிறது படத்தின் டீசர். விஜயும் சேதுபதியும் நேருக்கு நேராக மோதும் காட்சிகளும் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.

கொண்டாடும் விஜய் ஃபேன்ஸ்

கொண்டாடும் விஜய் ஃபேன்ஸ்

மாஸ்டர் படத்தின் டீசரின் மூலம் விஜய் தவறை தட்டிக்கேட்கும் ரவுடி வாத்தியாராக இருப்பார் என தெரிகிறது. டீசரில் ஆக்ஷன் காட்சிகள் தெறிக்கின்றன. மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big