ஆட்டுக்கு சந்தை பாத்திருப்பீங்கள்.. ஆனா ஆடு வங்கி பார்த்துள்ளீர்களா?.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

Nov 19, 2020

ஆட்டுக்கு சந்தை பாத்திருப்பீங்கள்.. ஆனா ஆடு வங்கி பார்த்துள்ளீர்களா?.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!

அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடு வங்கி (Goat Bank) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டம், தமிழகத்திலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது, இதன் தொடர்ச்சியாக இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை தொடங்க இந்நிறுவனம் முயன்று வருகிறது. இத்திட்டம் சந்தைகளுக்கு மாற்றான ஒரு உன்னதமான திட்டம் ஆகும். இதன் மூலம் பெண் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுகிறார்கள் ஆடு வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த ஆடுகளை சந்தைப்படுத்த மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்த இந்நிறுவனம் சந்தைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
 


இதன் மூலம், ஆடு உற்பத்தியாளர்கள் ஆடுகளை நேரடியாக இம்மாதிரியான கோட் பேங்க்-கை அணுகி சிறந்த விலைக்கு விற்று கொள்ளவும் வாங்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர் இன்றி உற்பத்தி செய்த பொருட்களுக்கு சரியான விலையில் கிடைப்பதாக ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இத்திட்டம் தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக ஆக்ரோட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தில் நீங்களும் பங்கு பெறுவதற்கும் லாபம் அடைவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதன் மூலம் குறைந்த முதலீட்டில் ஆட்டு வர்த்தகத்தில் நீங்களும் நிலையான மாத வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Ad

Your Ad Spot