அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக, சுமாா் 30,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவா்களில் 700 போ் உயிரிழந்திருப்பதாகவும் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:கடந்த ஜூன் 20 ஆம் திகதி முதல் செப்டம்பா் 22 ஆம் திகதி வரை டிரம்ப் நடத்திய 18 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகபட்ச அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியது.
அந்தக் கூட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் 300 கொரோனா மரணங்களுக்கு அந்தக் கூட்டங்கள் காரணமாக இருக்கலாம் எனவும் எங்களது பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin