சீனாவை ”வேட்டையாடுவோர்” என விளித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூறிய கருத்திற்கு கொழும்பிலுள்ள சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
மோசமான ஒப்பந்தங்கள், இறையாண்மைக்கு எதிரான வன்முறைகள், நிலங்கள், கடற்பரப்புகள் மீது சட்டவாக்கத்திற்கு இயைபில்லாத வகையிலான வேட்டையாளனாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி நோக்கப்படுகின்றது
என மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கையிலுள்ள சீன தூதரகம் பொம்பியோவின் கருத்து தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
குறித்த ட்வீட் பதிவில் அமெரிக்க இராஜாங்க செயலாளரை விளித்துள்ள சீன தூதரகம் தாம் சீன, இலங்கை நட்புறவு மற்றும் கூட்டிணைவு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் உங்களது AlienVsPredator விளையாட்டிற்கான அழைப்பில் அக்கறை செலுத்தும் எண்ணமில்லை எனவும் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடி நாடு எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு சீனாவின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் பதிலளித்திருந்தார்.
பொம்பியோ சீனாவைத் தாக்கிப் பேசுவதும் சீனாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் புதிய விடயமல்ல. அவர்கள் பழைய பொய்யை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர். அவரது பனிப்போர் மனோநிலையை வௌிப்படுத்தி வருகின்றார். பெறுமதியற்ற பனிப்போர் மனோநிலையை இல்லாது செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். சீனாவின் அச்சுறுத்தல் என கோருவதையும் பிராந்திய நாடுகளுக்கு இடையில் பிழையான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முயற்சிப்பதையும் நிறுத்த வேண்டும். என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Social Plugin
Social Plugin