
கோப்புப்படம்
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் என்பவரது வீட்டில் 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி திமுகவினர், சோதனை நடைபெறும் இடத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், ஈரோட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சென்னை, திருப்பூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக மொத்தமாக தமிழகத்தில் மொத்தமாக 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.