Type Here to Get Search Results !

#LiveTamilTV

திருக்கேதீஸ்வர திருத்தல கும்பாபிஷேக திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு!

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிஷேக திருவிழா வரும் 10ஆம் தேதி இடம்பெறாது என திருப்பணிச் சபை இணைச் செயலாளர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக திருவிழா அன்றைய தினம் நடை பெறாது.
மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான விபரங்களும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் நாட்டில் முற்றாக குறைவடையாத நிலையில், வெளி இடங்களில் இருந்து பக்தர்கள் திருவிழாவுக்கு வருவது, பக்தர்கள் ஒன்று கூடுவதில் பாரிய சிரமங்களை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தும்.
ஆகவே இதுபோன்ற பலவிதமான காரணங்களை ஆராய்ந்து இந்த மாதம் 10ம் தேதி நடைபெறவிருந்த கும்பாபிசேக திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான விபரங்களும் திகதியும் விரைவில் அறிவிக்கப்படும்”.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big