Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

கனடா நாட்டவர்களுக்கான வீசாவை அதிரடியாக நிறுத்தியது இண்டிய அரசு!!India suspends VISA services for Canadians

னடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு வீசா(Visa) வழங்குவதை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் கனடா மோதல் போக்கை கடைபிடிப்பதால் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

(Pictures By: Oneindia Web)
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என அந்நாடு பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேறவும் கனடா உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு பதிலடியாக, இந்தியாவில் இருந்து கனடா தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது.

கனடாவின் இந்த மோதல் போக்கால் இருநாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

இந்நிலையில் கனடா நாட்டவருக்கான விசா வழங்கும் நடைமுறைகளை மத்திய அரசு அதிரடியாக இன்று நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.

(Pictures By:TV9Marati Web)


இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர். மேலும் இந்தியாவுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கத்தை உருவாக்க முயற்சித்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவைகளில் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்தியதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்தான். இந்த காலிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள்தான் பஞ்சாப், ஹரியானாவில் திடீரென பிரிவினைவாத முழக்கங்களை ரயில் நிலையங்களில் எழுதுவது, சட்டசபை சுவர்களில் எழுதுவது என பல செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப்படை. இதன் தலைவரான நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா- கனடா இடையே மோதல் வெடித்துள்ளது. கனடா, இந்தியா நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகள் தற்போது இண்டிய நாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றன.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big