Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

கனடிய மக்கள் தமது கடவுச்சீட்டுக்களை, இந்த இலையுதிர் காலம் முதல் இணையவழியில் புதுப்பிக்க கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது: குடிவரவு அமைச்சர்!!

கனடிய மக்கள் தமது கடவுச்சீட்டுக்களை, இந்த இலையுதிர் காலம் முதல் இணையவழியில் புதுப்பிக்க கூடியவாறு இருக்கும் என, குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளார். 

அவசியமான ஆவணங்களையும் கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களையும், அரச இணையத்தளத்தில் பாதுகாப்பாக மக்கள் பதிவேற்றக்கூடியவாறு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
(Picture Got in : Social Media)

புதிய கனடிய கடவுச்சீட்டு வடிவத்தை அறிமுகப்படுத்தி வைத்த நிகழ்வில், குடிவரவு அமைச்சர் இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எனினும், தமக்கோ தமது பிள்ளைகளுக்கோ புதிய கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பிப்போர், தொடர்ந்தும் நேரடியாக Service Canada மையங்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். கடந்த ஆண்டு அதீதமாக குவிந்த கடவுச்சீட்டு விண்ணப்பங்களும், அதனால் ஏற்படுத்தப்பட்ட நீண்ட காத்திருப்பு வரிசைகளும் தந்த பாடங்கள், இணையவழி புதுப்பித்தல் சேவையை ஆரம்பிக்க காரணமாக உள்ளதென, கனடிய சமூக அபிவிருத்தி அமைச்சர் கூறியுள்ளார். 

The new Canadian passport is unveiled at an event at the Ottawa International Airport in Ottawa on Wednesday, May 10, 2023. THE CANADIAN PRESS/Sean Kilpatrick

[Source : CTVnews (The new Canadian passport is unveiled at an event at the Ottawa International Airport in Ottawa on Wednesday, May 10, 2023. THE CANADIAN PRESS/Sean Kilpatrick)


பெரும்பாலான விண்ணப்பங்கள் புதிய கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காகவே கிடைக்கப்பெறுகின்ற போதிலும், 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 10 ஆண்டுகால கடவுச்சீட்டுக்கள் காலாவதியாவதால், கடவுச்சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஆண்டு உயர்வடையும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big