சூர்யா-சச்சின் போட்டோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அதே புகைப்படத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள சச்சின், அதற்கு தமிழில் கேப்ஷன் கொடுத்து அசத்தியுள்ளார்.
சச்சினை சந்தித்த சூர்யா
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற உற்சாகத்தில் உள்ள சூர்யா, தற்போது சூர்யா 42-வில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யா 42 படப்பிடிப்பில் பிஸியாக உள்ள சூர்யா, இன்று காலை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். சூர்யா - சச்சின் நேரில் சந்தித்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டானது.
சச்சினின் ஸ்மார்ட் ட்வீட்
சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சூர்யா. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு ஜாம்பவான்களை ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி என கமெண்ட்ஸ் செய்துவந்தனர். அதேபோல், சூர்யா, சச்சின் போன்ற ஹேஷ்டேக்குகளில் இந்தப் போட்டோ செம்ம வைரலானது. இதனையடுத்து சூர்யாவுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சச்சின்.
சூர்யாவுக்காக தமிழில் கேப்ஷன்
மேலும், இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா, மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழில் கேப்ஷன் போட்டுள்ளார். சூர்யாவை சூரிய உதயமாக மாற்றி ரைம்மிங்காக தமிழில் ட்வீட் போட்ட சச்சினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த ஜீனியஸ் சச்சின் என கமெண்ட்களில் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
மீண்டும் ட்ரெண்டாகும் போட்டோ
சூர்யாவின் இன்ஸ்டா போஸ்ட் காலை முதல் சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்தது. இந்நிலையில், தற்போது சச்சின் தமிழில் ட்வீட் போட்டு சூர்யாவை வாழ்த்தியது, மீண்டும் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் தனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கும் யோகி பாபுவுக்கு, தோனி தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை பரிசாக அனுப்பியிருந்தார். தோனியின் ஆட்டோகிராப்புடன் கிடைத்த கிரிக்கெட் பேட்டுடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவும் சச்சினும் சந்தித்ததும் கோலிவுட் ரசிகர்களுக்கு சப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது...
Social Plugin
Social Plugin