Type Here to Get Search Results !

#HappyNewYear2025

#HappyNewYear2025
#HappyNewYear2025 #HappyNewYear #2025

ssss

WeLComeToSOORIYAN
@Sooriyantv24

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை அங்கீகரித்தது கனேடிய அரசாங்கம்!

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என கனேடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.


அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாக கனடா நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

தமிழ் இனப்படுகொலையை  அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாக கனடா! தமிழ் இனப்படுகொலையை  அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாக கனடா!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதற்கான பிரேரணையை ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதி (Scarborough-Rouge Park) கனேடிய-தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நேற்று மாலை முன்வைத்தார்.

இந்த பிரேரணேயை நாடாளுமன்றில் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ் இனப்படுகொலை தீா்மானம் ஏகமனதாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக ஏற்று அங்கீகரிக்கும் உலகின் முதலாவது நாடாளுமன்றம் கனடாவாகும் என ஹரி ஆனந்தசங்கரி ட்வீட் செய்துள்ளார்.

 தமிழ் இனப்படுகொலையை  அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாக கனடா!

கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது பல வருடகால உழைப்பு. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரது உழைப்பின் உச்ச விளைவாக இது நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த்:

கனேடிய நாடாளுமன்றம், மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கும் பிரேரணையை, நேற்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்ட கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், ஒரு தமிழ் கனேடியர் என்ற முறையில், கனடா நாடாளுமன்றம், மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்ததற்காக தான் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.  

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big