Type Here to Get Search Results !
--------------------------------------------------------------------------------------------

மக்கள் மத்தியில் கட்சிகளுக்கு பின்னடைவு – கனடா தேர்தல்

கனடாவில் இன்னும் சில நாட்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. கனடிய மக்கள் தங்களது வாக்குகளை கடமை தவறாது செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கிரேட்டர் டொரண்டோ பகுதியில் லிபரல் கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தகவல்கள் கூறுகின்றன.



கனடாவின் சில முக்கிய நகரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. GTA நகரில் 39 சதவீத மக்கள் தேர்தலின்போது லிபரல் கட்சியை தேர்வு செய்வார்கள் என்று கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டது. 33% மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியை தேர்ந்தெடுத்து வாக்களிப்பார்கள் என்றும் சனிக்கிழமை கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட லிபரல் கட்சியினருக்கு இந்தமுறை நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் 3% அதிகரித்துள்ளது.

ஜிடிஏ பகுதியில் 10% பேர் கனடா மக்கள் கட்சியையும், 15% மக்கள் புதிய ஜனநாயக கட்சியையும், மூன்று சதவீத மக்கள் பசுமை கட்சியின் தேர்ந்தெடுப்பார்கள் என்று கருத்துக் கணிப்பில் வெளிவந்தது. தற்பொழுது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிபரல் கட்சியினர் மக்களிடையே வலுவான ஆதரவை பெற்றுவருகின்றனர்.

லிபரல் கட்சியினர் பெண்கள் மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் மிக வலுவான செல்வாக்கு மற்றும் ஆதரவை பெற்றுள்ளனர். இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினர்கள் என் டி பி கட்சியை மிக வலுவாக ஆதரித்துள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலான ஆண்கள் பழமைவாதி கட்சிகளை ஆதரித்துள்ளனர். ஆங்காங்கே கட்சிகள் பின்னடைவு அடைந்துள்ளது என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big